டயானாவுக்கு எதிரான மனு விசாரணைக்கு வருகிறது

305

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை மீள் பரிசீலனை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

இந்த மனுவின் தீர்ப்பு இன்று (25) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவிக்கவுள்ளது.

ஆனால் தமக்கும் நீதிபதி மரிக்காருக்கும் இடையில் பிளவுபட்ட தீர்ப்பு இருப்பதாக தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன குறிப்பிட்டார்.

எனவே, இந்த வழக்கை முழு குழு முன்பு மீண்டும் விசாரிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 14-ஆம் திகதி நடத்த உத்தரவிடப்பட்டது.

இந்த மனுவை சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமர்ப்பித்துள்ளதுடன், பிரதிவாதியான டயானா கமகே பிரித்தானிய பிரஜை என்பதனால், நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம், இந்நாட்டு நாடாளுமன்றத்தில் அமர்வதற்கான சட்டப்பூர்வ தகுதி அவருக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக ஆணை பிறப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாரர் கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here