துப்பாக்கி இல்லாத லத்தியுடன் கூடிய பொலிஸ் அதிகாரம் வழங்கும் பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி இணக்கம்

1169

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.

மாகாண சபைகளுக்கு ஏனைய அதிகாரங்களை வழங்குவதை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி செயற்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சில மாநிலங்களுக்கு ஆயுதங்கள் இன்றி பொலிஸாரினால் மட்டுமே பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சாதாரண பொலிஸ் கடமைகள் இருப்பதாகவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், அந்த வகையில் பொலிஸ் அதிகாரம் வழங்குவது குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here