மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி ஊடாக பாதுகாப்பு தரப்பினர் மக்களுக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, நாட்டில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு கலைக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து நிறுவனங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நைஜர் இராணுவம் தெரிவித்துள்ளது.
நைஜர் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் நேற்று அதிகாலை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.