சிறுநீரக சத்திர சிகிச்சை நிறுத்தப்படும் ஆபத்து

370

கொழும்பு தேசிய சிறுநீரக வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள சிறுநீரக வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு காரணமாக எதிர்காலத்தில் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்படும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

மருந்து தட்டுப்பாடு காரணமாக அந்த வைத்தியசாலைகளில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்துமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், மருந்து இருப்புக்களை முறையாக பராமரிக்காத காரணத்தினால் அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

அவசரகால கொள்வனவுகளின் போது இரண்டு இலட்சம் வால்வுகளை 20 அல்லது 30 இலட்சத்திற்கு கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும், தனியார் துறையைச் சேர்ந்த சிலர் அவற்றை ஏற்கனவே கொண்டு வந்து சேமித்து வைத்திருக்கலாம் எனவும் வைத்தியர் ஹரித அலுத்கே மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here