“மூன்று ஆண்டுகளில் நாடு கட்டமைக்கப்படும்”

338

ராஜபக்ஷர்கள் புடின், துட்டகைமுனு, தர்மபால என்று கூறியே மக்களை ஏமாற்றி நாட்டை வங்குரோத்து செய்தவர்களுக்கு நாட்டின் இறையாண்மை பற்றி ஒரு வார்த்தை கூட பேச உரிமையில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

திருட்டை நிறுத்துவதும் அரசாங்கத்தின் வினைத்திறனை உருவாக்குவதும் இன்றியமையாத பணியாகும் என தெரிவித்த பாட்டளி சம்பிக்க ரணவக்க, திருட்டை நிறுத்துவதற்கும் நாட்டை வளமாக்குவதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் ஒரு நாட்டின் தலைவர்களாக இருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய குடியரசு முன்னணியின் அனுராதபுரம் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாட்டளி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஆவணத்தின் பிரகாரம் 2032 இல் நாடு நெருக்கடியில் இருந்து விடுபட்டு 2048 இல் நாடு அபிவிருத்தி அடையும் என தெரிவித்த பாட்டளி சம்பிக்க ரணவக்க மேலும் 25 வருடங்கள் துன்பப்பட முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூன்று வருடங்களுக்குள் நாட்டைக் கட்டியெழுப்பும் ஆற்றல் ஐக்கியக் குடியரசு முன்னணிக்கு இருப்பதாகத் தெரிவித்த பாட்டளி சம்பிக்க ரணவக்க நாட்டில் உள்ள மூன்று அடிப்படைப் பிரச்சினைகளான மருந்து, வைத்தியசாலை சேவை, உணவுப் பிரச்சினை, எரிசக்திப் பிரச்சினை, போக்குவரத்து மற்றும் மின்சாரம் முதலில் தீர்க்கப்படும்.

நாட்டை முதலில் கட்டியெழுப்புவோம் என்ற நம்பிக்கையை நாட்டின் தொழில் வல்லுனர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here