அநுரவுக்கு தடை

972

தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கு எதிராக கொழும்பில் பல முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோட்டை பொலிஸாரால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி இன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை பின்வரும் இடங்களில் போராட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள வீதிகள் ஆவன;

ஜனாதிபதியின் செயலாளர் அலுவலகம்,
ஜனாதிபதி மாளிகை,
நிதி அமைச்சகம்,
மத்திய வங்கி,
பொலிஸ் தலைமையகம்,
ஒல்காட் அவென்யூ கோட்டை ரயில் நிலையத்திலிருந்து CTO சந்தி வரை,
லோட்டஸ் வீதி CTO சந்தி முதல் செராமிக் சந்தி வரை NSA சுற்றுவட்டம்,
யார்க் தெரு,
வங்கி அவென்யூ,
சத்தாம் அவென்யூ,
முதலிகே ஒழுங்கை,
பரோன் ஜயதிலக அவென்யூ,
பொலிஸ் தலைமையகம் எதிரில்,
சாரணர் அவென்யூ
சைத்யா வீதி,
ஜனாதிபதி அவென்யூ,
காலி வீதி, காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து NSA சுற்றுவட்ட வீதி மற்றும் காலிமுகத்திடல் வளாகம் ஜனாதிபதி செயலகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here