வறட்சியான காலநிலை காரணமாக பயிர் சேதங்களுக்கு இழப்பீடு

316

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

தற்போதைய வறண்ட காலநிலை குறித்து நேற்று (31) நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வறட்சியான காலநிலை காரணமாக விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக நீர் விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நீர் மின்சார உற்பத்திக்காக நீர் வழங்கப்படுவதாகவும், குடிநீர் வழங்குவதில் பிரச்சினை இல்லை எனவும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சிக்கல் நிலை காரணமாக பயிர்ச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கேற்ப முறை குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

தற்போதும், தீவின் பல பகுதிகளில் வறண்ட காலநிலை நிலவுவதாகவும், நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் நிலைமை மேலும் மோசமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீரை கவனமாகப் பயன்படுத்துவது அனைத்துத் தரப்பினரின் பொறுப்பாகும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here