ஐந்து மாவட்டங்களில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு

2764

சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத்திற்காக நீர் திறந்துவிடப்படுமாயின் ஐந்து மாவட்டங்களில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நான்கைந்து நாட்களுக்கு மட்டுமே விவசாயத்திற்கு தண்ணீர் விட முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு செய்யப்படுமானால் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 4 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதற்கமைய, மின்வெட்டு இன்றி திறந்து விடக்கூடிய அதிகபட்ச நீரை தொடர்ந்தும் விடுவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இரண்டு மணித்தியால மின்வெட்டை தாங்கிக்கொண்டு விவசாயத்திற்கு தேவையான நீரை விடுவிப்பது தற்போது அத்தியாவசியமான விடயம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here