தேசிய உற்பத்திக்கு பெரும் பங்களிப்பை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களும் நீர் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்களின் வாழ்க்கைச் சுமையும் அதிகரித்து வருவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகள் வருவதும் நிறுத்தப்படலாம் என பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர்க் கட்டணத்தை கிட்டத்தட்ட 50 வீதத்தால் உயர்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.