கொழும்பு துறைமுகத்திற்கு யூரியா உரக் கப்பல்

381

ஜப்பானிய உதவியின் கீழ் 8,500 மெட்ரிக் தொன் யூரியா உரக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உலக உணவு மற்றும் விவசாய வேலைத்திட்டத்தின் கீழ் அநுராதபுரம் மாவட்டம் மற்றும் வடமாகாண விவசாயிகளுக்கு ஜப்பானிய அரசாங்கம் இந்த உரத்தொகையை வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றிரவு (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் இருந்து உரம் இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், உர இருப்பு நாளை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை, நேற்றுமுன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 18,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிச் சென்ற கப்பல் தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள விவசாய நிலையங்களுக்கு உர விநியோகத்தை மேற்கொண்டு வருவதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here