நாட்டில் 40,000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்

491

இலங்கையில் 40,000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்கள் என கூறிக்கொள்ளும் இவர்கள் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தி எவ்வித தகைமையும் இன்றி நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதாக குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், வைத்தியராகக் காட்டிக்கொள்பவர்கள் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்துவதற்கான சட்ட விதிகளில் சில சிக்கல் நிலைமைகள் காணப்படுவதால், அவற்றைத் தீர்ப்பதற்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here