follow the truth

follow the truth

May, 14, 2024
HomeTOP1பொலிஸ் அதிகாரப் பகிர்வு பற்றி பொலிஸ் அமைச்சரும் TNAயும் கலந்துரையாடல்

பொலிஸ் அதிகாரப் பகிர்வு பற்றி பொலிஸ் அமைச்சரும் TNAயும் கலந்துரையாடல்

Published on

13வது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரப் பகிர்வு தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் நேற்று (09) பிற்பகல் பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் அதிகாரங்களைக் கோருவதற்கான காரணங்களைக் கேட்டறிந்தார்.

உலகின் ஏனைய நாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு அதிகாரப் பகிர்வின் அவசியத்தை தமிழ்க் கூட்டமைப்பினர் விளக்கியதாகவும், தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அதிகாரங்களை பிரிக்காமல் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அமைச்சர் கலந்துரையாடினார்.

இங்கிலாந்து, இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட அதிகாரப் பகிர்வு சிறப்பான முறையில் நடைபெற்றதாகச் சுட்டிக்காட்டிய தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள், அங்கு பயன்படுத்தப்பட்ட முறைகளை இலங்கையிலும் நடைமுறைப்படுத்த முடியும் எனவும் விளக்கமளித்தனர்.

இங்கிலாந்து மற்றும் இலங்கையின் அரசியல் மற்றும் சமூக கலாச்சாரங்கள் முற்றிலும் வேறுபட்டவை என அமைச்சர் டிரான் அலஸ் சுட்டிக்காட்டினார்.

பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் தமிழ் மக்களிடமும் தமிழ் அரசியல் தலைவர்களிடமும் கேள்வி எழுப்பினார்.

மாவட்டக் குழுக்களால் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நீண்ட தூரம் சென்று கொழும்புக்கு வர வேண்டியுள்ளதாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பான உத்தேச விடயங்களில் புதிதாக எதுவும் சேர்க்கப்படவில்லை எனவும், ஆனால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மேலதிகமாக மாகாண பொலிஸ் ஆணைக்குழுவையும் நியமிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடபகுதி முழுவதும் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும், பல இளம் சிறார்கள் போதைப்பொருளுக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக அமைப்புகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழுவிற்கு இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் தகவல்களை எந்த நேரத்திலும் வழங்குவதாகவும், அவ்வாறான தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்தார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தலைமையில் உரிய விசேட பொலிஸ் குழு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான தகவல்களை பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் எந்த நேரத்திலும் கலந்துரையாட முடியும் எனவும் திரண் அலஸ் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக இரு தரப்பினரும் அடுத்த விவாதத்தை பதினைந்து நாட்களில் நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

LATEST NEWS

MORE ARTICLES

ஒரு குடும்பத்தின் மாதாந்த நுகர்வுச் செலவு ரூ.103,283

பணவீக்கம் காரணமாக, இலங்கையில் ஒரு குடும்பத்திற்கான மாதாந்த நுகர்வுச் செலவு 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 டிசம்பர்...

உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்க அனுமதி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைவாக,...

சுற்றுலாப் பயணிகளுக்கு ‘தேநீர் பரிசு’

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலை நினைவுப் பரிசை வழங்குவதற்கு ஏற்பாடு...