“வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தலில் விதிகள் விதிக்க வேண்டும்”

715

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் மேலும் கலந்துரையாட வேண்டும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு ஒருமுறை வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டு மீண்டும் பாரவூர்திகளை கொண்டு வர சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகவும் அதன் காரணமாக விலை தகாத முறையில் அதிகரிக்கப்பட்டதாகவும் அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்தார்.

இதன்படி, வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வு அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும், அது தொடர்பான தளர்வுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டின் பணம் விரயமாகலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் போது தமது சங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் நிபந்தனைகளை விதிக்காமல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் வாகனங்களின் விலைகள் ஏலத்தில் பொருத்தமற்ற வகையில் அதிகரிக்கும் எனவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here