இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தினம் இன்று(15) கொண்டாடப்படுகின்றது.
தலைநகர் டில்லியிலுள்ள செங்கோட்டையில் காலை 7.30க்கு பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி உரை நிகழ்த்தவுள்ளார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு துறைகளையும் சேர்ந்த 1800 சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
G-20 அமைப்பின் தலைமைத்துவம் தற்போது இந்தியாவிடம் இருப்பதால், அதன் இலட்சினை செங்கோட்டையில் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் செங்கோட்டையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
10000 இற்கும் அதிகமான வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், ட்ரோன்களின் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.