Tik Tok மொபைல் செயலியை தடை செய்யக் கோரி மனு

630

கென்யாவில் டிக் டோக் மொபைல் செயலியை தடை செய்யக் கோரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மனு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தை சீரழிப்பதில் டிக் டாக் முக்கிய பங்காற்றுவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள இளைஞர்கள் மத்தியில் Tik Tok பயன்பாடு வேகமாக பிரபலமடைந்து வருவதாகவும், அதில் பரவும் உள்ளடக்கம் சமூகத்திற்கு ஏற்றதல்ல என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.

டிக்டாக் செயலி மூலம் நாட்டின் குழந்தைகளின் தனியுரிமை கூட பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் காட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனவே இதனை தடை செய்ய பாராளுமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here