இந்தியா பெரிய வெங்காயத்திற்கு 40% ஏற்றுமதி வரி விதிப்பு

342

வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை இந்தியா உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது.

வெங்காயத்திற்கு 40 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவின் உள்நாட்டு சந்தைகளில் வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வெங்காயத்திற்கு இந்தியா விதித்துள்ள ஏற்றுமதி வரி எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா விதித்துள்ள இந்த ஏற்றுமதி வரி வங்கதேசம், நேபாளம், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் வெங்காய விலையை பாதிக்கும்.

உலகின் மிகப்பெரிய வெங்காய ஏற்றுமதியாளராக இந்தியா கருதப்படுகிறது.

இந்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலுக்கு முன்னதாக வெங்காய ஏற்றுமதியை கட்டுப்படுத்தி, உள்நாட்டு சந்தையில் வெங்காய விலையை குறைக்கும் நோக்கில் இந்திய அதிகாரிகள் வெங்காயத்திற்கு ஏற்றுமதி வரி விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், இந்தியாவில் இந்த ஏற்றுமதி வரி விதிப்பால், பாகிஸ்தான், சீனா, எகிப்து ஆகிய நாடுகளில் வெங்காயத்தின் விலை அந்நாட்டின் வெங்காய விலையை விட குறையும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here