கிம்புலாவல STREET FOOD கடைகளை அகற்றுமாறு அறிவித்தல்

963

கிம்புலாவலவில் உள்ள வீதி உணவு (STREET FOOD) விற்பனை நிலையங்களை 14 நாட்களுக்குள் அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

குறித்த கடைகளால் வீதியில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், அனுமதியின்றி இரண்டு மாடிக் கடைகள் கட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர் எம்மிடம் தெரிவித்தார்.

இதனால் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாக நாளாந்தம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறும் நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிக்கின்றது.

எனினும், சில அமைப்புகளின் கட்டுப்பாட்டில் கடைகளை நடத்த விரும்புவதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக இக்கடைகளை அகற்ற நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்திருந்த நிலையில், பின்னர் கடை உரிமையாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டது.

தெருவோர உணவுக் கடைகளை சாலையிலிருந்து திரும்பப் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், இன்னும் சில கடைகள் சாலையை மறித்து கடைகளை நடத்தி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here