கொடிய பாக்டீரியா சிறைக்குள் வந்தது குறித்து பரிசோதனை

514

காலி சிறைச்சாலையில் மெனிங்கோகோகல் (Meningococcal) பாக்டீரியா பரவியதன் காரணமாக கைதிகள் உயிரிழந்தும் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி சிறைச்சாலையில் பரவி வரும் காய்ச்சல் காரணமாக இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் உயிரிழந்த இரு கைதிகளின் பிரேதப் பரிசோதனைகள் நேற்று (21) நடத்தப்பட்டு வைத்தியர்கள் திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இதன்படி, உடல் உறுப்புகள் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க பரிசோதனையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மெனிங்கோகோகல் பாக்டீரியா கொடிய பாக்டீரியா என்றும், போதைப்பொருள் பாவனையால் உடல் நலம் குன்றியவர்களை இது பாதிக்கிறது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவித்த பதில் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய;

“.. தற்போது இந்த நோய் மெனிங்கோகோகல் எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று என ஓரளவு கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் இந்த பாக்டீரியா சிறைக்குள் எப்படி வந்தது என்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றோம். கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டவர் ஒருவாரத்தின் பின்னர் உயிரிழந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. சுமார் 24 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார். அந்த நபரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது..”

இதேவேளை, பாக்டீரியா சமூகத்திற்குள் நுழைவதைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

“… இந்த பாக்டீரியா சமூகத்துக்குள் நுழையாமல் இருக்க முடிந்த அளவு முயற்சி செய்து வருகிறோம். அவ்வப்போது வெளியூர் சென்று வருபவர்கள் மூலம் இந்த பாக்டீரியா வர வாய்ப்பு உள்ளது. மக்கள் கூடும் இடங்களில் வர வாய்ப்பு உள்ளது. சில நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மேலும், மோசமான சுகாதார வசதிகள் உள்ள சிறைச்சாலைகள் போன்ற இடங்கள் உள்ளன. அது நடக்க வாய்ப்பு உள்ளது. பல்கலைக்கழகங்களில் கூட மாணவர்கள் ஒன்று கூடி சுற்றித்திரிவதால் இது போன்ற சூழல்கள் ஏற்படும். ஆனால் இதுவல்ல நம் நாட்டில் பொதுவான சூழ்நிலை, இருப்பினும், இது பரவாமல் தடுக்க சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றே கூற வேண்டும்..”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here