follow the truth

follow the truth

August, 24, 2025
Homeவிளையாட்டுவிராட் கோலிக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையால் எச்சரிக்கை

விராட் கோலிக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையால் எச்சரிக்கை

Published on

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்தியாவில் எதிருவரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது .

10 ஆண்டுகளாக ஐசிசி கிண்ணத்தை வெல்லாத இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.

இந்நிலையில் உலகக்கிண்ணத்திற்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் வரும் 30-ம் திகதி ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. உலகக்கிண்ணத்திற்கு வீரர்களை தேர்வு செய்ய உதவும் இந்த தொடரில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா தலைமையில் 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வீரர்களின் உடற்தகுதி குறித்து சோதிக்கும் யோ யோ தேர்வு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. அதன்படி யோ யோ தேர்வில் நட்சத்திர வீரர் விராட் கோலி கலந்து கொண்டு உடல் தகுதியை நிரூபித்தார்.

அனைத்து விதமான சோதனைகளையும் கடந்து 17.2 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யோ யோ தேர்வு குறித்த புகைப்படத்தை பதிவிடலாம், ஆனால் மதிப்பெண்ணை யாரைக் கேட்டு பதிவிட்டீர்கள் என்று பிசிசிஐ கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

அதே போல் எந்த வீரரும் யோ யோ தேர்வு குறித்த மதிப்பெண்ணை வெளியிடக்கூடாது என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...