உலக தடகளத்தில் முதல் தங்கப்பதக்கத்தை வசப்படுத்திய நீரஜ் சோப்ரா

181

உலக தடகளத்தின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் அசத்திய இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.17 மீ., தூரம் எறிந்து தங்கம் வென்றார்.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.77 மீ., துாரம் எறிந்து இறுதிக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான மானு , கிஷோர் ஆகியோரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

இந்நிலையில், இன்று நடந்த இறுதிச் சுற்றில் தனது 2வது முயற்சியில் 88.17 மீ., தூரம் வீசிய நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன் மூலம், இந்தியாவுக்கு உலக தடகளத்தில் முதல் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

மேலும், உலக தடகளத்தில் இரு பதக்கங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. அவர் கடந்த முறை (2022, அமெரிக்கா) வெள்ளி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் கிஷோர் 5வது இடமும், மானு 6வது இடமும் பிடித்தனர். பாகிஸ்தான் வீரர் நதீம் வெள்ளி வென்றார். செக் குடியரசை சேர்ந்த ஜாகுப் வெண்கலம் வென்றார்.

நீரஜ் வென்ற தங்க பதக்கங்கள்:

ஒலிம்பிக் 2020
உலக தடகளம் 2023
டைமண்ட் லீக் 2022
ஆசிய விளையாட்டு 2018
காமன்வெல்த் 2018
ஆசிய சாம்பியன்ஷிப் 2017
தெற்கு ஆசிய விளையாட்டு 2016

* 2022 உலக தடகளத்தில் வெள்ளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here