இஸ்ரேல் அமைச்சரை சந்தித்ததால் லிபியா பெண் அமைச்சர் பதவி இடைநிறுத்தம்

597

லிபியா நாட்டின் வெளியுறவுத் துறையின் பெண் அமைச்சராக இருப்பவர் நஜ்லா அல்-மங்குஷ்.

இவர் சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, இஸ்ரேலின் வெளியுறவுத் துறை அமைச்சர் கோஹனை சந்தித்து பேசினார். இது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பாகும். இதில் லிபிய யூதர்களின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.

இதற்கு லிபியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பெண் அமைச்சர் நஜ்லாவை இடைநிறுத்தம் செய்து பிரதமர் அப்துல் ஹமித் உத்தரவிட்டுள்ளார்.

நீதி அமைச்சர் தலைமையிலான ஆணையத்தின் நிர்வாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான லிபிய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, ரோமில் நடந்தது ஒரு அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பாகும். பாலஸ்தீன விவகாரம் தொடர்பாக லிபியாவின் நிலைப்பாட்டை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பை ஒரு பேச்சுவார்த்தைக்காக முன்வைக்க இஸ்ரேல் முயற்சிக்கிறது என்று கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here