follow the truth

follow the truth

May, 14, 2024
HomeTOP1முக்கிய இரு வகையான தடுப்பூசிகள் நாட்டில் இல்லை

முக்கிய இரு வகையான தடுப்பூசிகள் நாட்டில் இல்லை

Published on

மஞ்சள் காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகியவற்றுக்கான தடுப்பூசிகள் நாட்டில் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆபிரிக்க பிராந்தியத்தில் தொழில் நிமித்தம் செல்வோருக்கு மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஜி.விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக ஒப்பந்தம் செய்துகொண்ட விநியோகஸ்தரால் சரியான முறையில் தடுப்பூசிகளை வழங்கப்படாத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து அந்த தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.

அதற்கிணங்க, குறித்த விநியோகஸ்தரிடமிருந்து விரைவில் தடுப்பூசியை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு பயணிப்போருக்கு மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

எனினும், இந்த தடுப்பூசிகளும் தற்போது நாட்டிலுள்ள மருந்தகங்களில் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

குறித்த மருந்து தொகை, முற்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவை எதிர்வரும் வாரங்களுக்குள் நாட்டிற்கு கிடைக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

பிரதான பாதை ரயில் சேவையில் பாதிப்பு

களனி மற்றும் புத்தளம் பிரதான பாதையில் ரயில் சேவைகள் இவ்வாறு தடைபட்டுள்ளதாக ரயிவே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. சமிக்ஞை கோளாறு...

சிசு செரிய பஸ் சேவை எண்ணிக்கையை 2000 வரை அதிகரிக்க நடவடிக்கை

அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்கு மேலும் 500 சிசு செரிய பஸ் சேவைகளை வழங்கி அதன் எண்ணிக்கையை 2000...

வெசாக் அலங்காரங்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம்

வெசாக் பண்டிகையின் போது செய்யப்படும் பல்வேறு அலங்காரங்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுற்றாடல்...