follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉலகம்காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனை இழந்த காதலன்

காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனை இழந்த காதலன்

Published on

காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம்.

காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன.
அவை நல்ல மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகின்றன. என்றாலும் அதிலும் பல்வேறு பாதிப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன.

சீனாவை சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடி அடிக்கடி பல இடங்களுக்கு சென்று தங்களின் காதலை வளர்த்து வந்தனர்.

இந்தநிலையில் இருவரும் சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு இருவரும் ‘லிப்லாக்’ எனப்படும் உதட்டு முத்தம் கொடுத்துள்ளனர். இருவரும் உதட்டோடு உதட்டை வைத்து சுமார் 10 நிமிடங்களுக்கு விடாமல் முத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் திடீரென்று காதலனின் காதில் ஊசி குத்துவது போன்று வலி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் தனது காதலியிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உதட்டு முத்தத்தை நிறுத்திவிட்டு அவர்கள் இருவரும் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்துள்ளனர். ஆனால் காதலனின் காதில் ஏற்பட்ட வலி நேரம் செல்ல செல்ல அதிகரித்ததோடு, அவரின் கேட்கும் திறனும் குறைந்துள்ளது.
இதையடுத்து உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு காதலனுக்கு டாக்டர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டனர். அப்போது அவரது காதின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்புற பகுதியை பிரிக்கும் சிறிய மெல்லிய சவ்வு போன்ற பகுதியில் சிறு அளவிலான 2 துளைகள் இருப்பது தெரியவந்தது. அதுதான் அவரது காது வலிக்கு காரணம் என்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர்.
உணர்ச்சிவசப்பட்டு கொடுக்கும் முத்தம் காதுக்குள் காற்றழுத்தத்தில் விரைவான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றனர். இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவர் முழுமையாக குணமடைய 2 மாதங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளனர். காதலன் காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனையே இழந்த சம்பவம் காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு...

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானிய அரசு தீர்மானம்

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வேலைவாய்ப்பு விசாக்கள் மூலம் பிரித்தானியாவுக்கு...