follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விலையில் மாற்றம்

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விலையில் மாற்றம்

Published on

ஆசியக்கிண்ணத் தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை சனிக்கிழமை (02) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்வாறான நிலையில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை டிக்கெட்டுகளின் விலைகளை அதிகமாக நிர்ணயித்திருந்தது.

பல்லேகலை மைதானத்தின் புற்தரை பகுதிகளுக்கான டிக்கெட்டுகள் விலை 9600 ரூபாவாக (குறைந்தபட்ச டிக்கெட் விலை) நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் குறித்த விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், தற்போது இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான புற்தரை பகுதிகளுக்கான டிக்கெட்டுகளை 1500 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்தியா – பாகிஸ்தான் மற்றும் நேபாளம் – இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளுக்குமான டிக்கெட்டுகளை ரசிகர்கள் கொள்வனவு செய்யும் பட்சத்தில் 2550 ரூபாவுக்கு இரண்டு போட்டிகளையும் ரசிகர்கள் பார்வையிட முடியும் எனவும் அறிவறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, விலைகள் கீழே காட்டப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...