ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஜோ பைடன்

106

ஜி-20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு வருகிற 9 மற்றும் 10ம் திகதி இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. ஜி-20 மாநாடு நடத்த பிரமாண்ட மாநாட்டு கட்டிடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பங்கேற்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரஷிய ஜனாதிபதி புதின், சீன ஜனாதிபதி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் வருகிற 7-ந் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஜி-20 மாநாட்டுக்கு முன்பாக 8-ந் திகதி ஜோபைடன் இந்திய பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;

ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ஜோபைடன் 7ம் திகதி இந்தியாவுக்கு வருகிறார். 8ம் திகதி இந்திய பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி ஜோபைடன் இரு தரப்பு சந்திப்பில் பங்கேற்கிறார். 9 மற்றும் 10ம் திகதிகளில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கிறார். அதில் ஜனாதிபதி ஜோபைடன், மற்ற உறுப்பு நாட்டு தலைவர்கள், தூய்மையான எரிசக்தி மாற்றம், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகளை சமாளிப்பதற்காக கூட்டு முயற்சிகள் குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. ஜோபைடன்-மோடியின் இரு தரப்பு பேச்சு வார்த்தையில் இரு நாட்டு வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here