எரிவாயு விலை குறித்து இன்று இறுதி தீர்மானம்

376

உள்நாட்டு எரிவாயு விலை இன்று திருத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று காலை நடைபெறவுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 900 முதல் 1000 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பே எரிவாயு விலை அதிகரிப்புக்கு காரணம் என லிட்ரோ நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்.

நாட்டில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிப்பு எரிவாயு விலை திருத்தத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் எரிவாயு விலையை கருத்தில் கொண்டு, கடந்த மாதமும் எரிவாயு விலையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் நாட்டில் போதுமான எரிவாயு இருப்பு இருப்பதால், எரிவாயு விலை திருத்தப்படவில்லை.

கடந்த ஜூலை மாதம், கடைசியாக எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டு, அதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது 2,982 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 05 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,198 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது 561 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here