follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுமின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கான தடை நீக்கம்

மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கான தடை நீக்கம்

Published on

மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சட்ட வரைவு ஊடாக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.

மின்சார முச்சக்கரவண்டிகளின் உற்பத்தியிலும், பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் முச்சக்கரவண்டிகளை மின்சாரத்தில் இயக்குவதற்கும் மின்சாரம் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகள் பயன்படுத்தப்படுவதால், அத்தகைய முச்சக்கரவண்டிகளின் நிகர எடை 500 கிலோவுக்கு மேல் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், மோட்டார் வாகனச் சட்டத்தின் விளக்கத்தின்படி, ஒரு மோட்டார் முச்சக்கரவண்டியின் நிகர எடை 500 கிலோ கிராமும் மொத்த எடை 1,000 கிலோ கிராமிற்கும் மேற்படாது இருக்க வேண்டும்.

இதன்படி, மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கு உள்ள தடைகளை நீக்கி மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி அது தொடர்பான சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டு அதன் பின்னர் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...