“செயலாளர் பதவியைத் தவிர வேறு எந்தப் பதவிக்கும் அவரை ஏற்றுக்கொள்வோம்”

453

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை தவிர வேறு எந்தப் பதவிக்கும் தயாசிறி ஜயசேகரவை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள விரும்புவதாக கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கட்சியுடன் இணக்கப்பாட்டுக்கு வந்து பல்வேறு நடவடிக்கைகளை நிறுத்துவதன் மூலம் தயாசிறி ஜயசேகரவின் தற்காலிக இடைநிறுத்தப்பட்ட உறுப்புரிமையை மீண்டும் செயற்படுத்த முடியும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஊடகவியலாளர் – பொதுச்செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதா?

மைத்திரிபால சிறிசேன – இல்லை, அவர் நீக்கப்படவில்லை.. அவரது பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.. இன்று தன்னை தலைமைப் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.. இப்படி பல விடயங்கள் உள்ளன.. நான். அவற்றை விவரம் கூற விரும்பவில்லை… அவர் எந்த பிரச்சினையும் இல்லாமல் கட்சியில் சேரலாம்.

ஊடகவியலாளர் – உறுப்புரிமை இன்னும் கிடைக்குமா?

மைத்திரிபால சிறிசேன – அங்கத்துவம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.. எம்முடன் இணக்கப்பாடு ஏற்படுத்தி அவர் செய்துவரும் பல்வேறு செயற்பாடுகளை நிறுத்துவதன் மூலம் எந்த நேரத்திலும் அதனை நீக்க முடியும்.

ஊடகவியலாளர் – இது கட்சியின் முடிவா? உங்கள் முடிவா?

மைத்திரிபால சிறிசேன – இது கட்சியின் முடிவு.. அரசியல் குழுவின் முடிவு..

ஊடகவியலாளர் – அவர் ஒழுக்கமின்றி நடந்து கொண்டாரா? நீங்கள் அவருடன் அன்புடன் இருந்தீர்களே..?

மைத்திரிபால சிறிசேன – அரசியல் கட்சிகளில் அப்படித்தான்.. பண்டாரநாயக்கா தனது மகள்கள், மகன்கள், மருமகன்கள் அனைவரையும் நீக்கினார்.. அப்படித்தான்..

ஊடகவியலாளர் – தயாசிறி அண்மைய நாட்களில் உங்களுடன் நெருக்கமாக இருந்தார்..

மைத்திரிபால சிறிசேன – அது சரி… எனக்கு மிக நெருக்கமானவரிடமிருந்து தான்… (புன்னகையுடன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here