follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1மொரோக்கோ நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 600ஐ தாண்டியது

மொரோக்கோ நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 600ஐ தாண்டியது

Published on

வட ஆபிரிக்காவின் மொரோக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 632 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொரோக்கோவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதன் மையம் மராகேஷிலிருந்து 71 கிமீ தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைத்தொடரில் 18.5 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளது.

நாட்டின் நான்காவது பெரிய நகரமான மராகேஷ் அதிக சேதத்தை சந்தித்துள்ளது.

மேலும், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்டுள்ள பழைய மராகேஷ் நகரமும் சேதமடைந்துள்ளது.

100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தின் இடிபாடுகளால் சாலைகள் சேதமடைந்துள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பணியாளர்கள் செல்வது சிரமமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த தானம் செய்யுமாறும் அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

2004-க்குப் பிறகு மொராக்கோவைத் தாக்கும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகக் கூறப்படுகிறது.

120 ஆண்டுகளுக்குப் பிறகு வட ஆபிரிக்க பிராந்தியத்தில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்பதும் சிறப்பு.

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...