ரஷ்யா – உக்ரைன் போர் : அந்த தாக்குதலை நான் தான் தடுத்து நிறுத்தினேன் – எலான் மஸ்க் அதிரடி

528

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ரஷிய கடற்படை தளத்தை உக்ரைன் தாக்காமல் இருக்க நான் தான் காரணம் என்று தெரிவித்து இருக்கிறார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மாஸ்கோ அருகில் உள்ள கருங்கடல் பகுதியில் இணைய வசதியை செயல்படுத்துமாறு உக்ரைன் சார்பில் தனக்கு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டதாக எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.

எனினும், இதன் விளைவை கருத்தில் கொண்டு இணைய வசதியை செயல்படுத்தவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே போர் துவங்கிய குறுகிய காலக்கட்டத்திலேயே எலான் மஸ்க்-இன் ஸ்டார்லின்க் எனும் செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவை வழங்கும் நிறுவனம் உக்ரைனுக்கு இணைய சேவையை வழங்க துவங்கியது.

“செவஸ்டாபோல் வரை ஸ்டார்லின்க் சேவையை செயல்படுத்துமாறு அரசு அதிகாரிகளிடம் இருந்து அவசர கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ரஷியாவின் கடற்படை தளத்தை முழுமையாக மூழ்க செய்வது தான். நான் அவர்களின் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டு இருந்தால், போரில் மிகப் பெரிய தாக்கம் ஏற்பட ஸ்பேஸ்-எக்ஸ் முக்கிய காரணமாக மாறி இருக்கும்,” என்று எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here