சுங்கத்துறை சோதனை தாமதத்தால் தேங்கியுள்ள 965 கொள்கலன்கள்

136

இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 965 கொள்கலன்கள் ஆய்வு தாமதம் காரணமாக துறைமுக முனையங்களிலோ அல்லது சுங்கப் பரீட்சை முற்றங்களிலோ தேங்கிக் கிடப்பதாக வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

விசாரணைகள் மற்றும் வழக்குகள் முடிவடையாதது முக்கியமாக பாதித்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

சுங்க மேன்முறையீட்டு நடைமுறை நீண்ட காலம் நீடிப்பதால் இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய அறிக்கை தெரிவிக்கின்றது.

அதன்படி, சுங்க விசாரணைகள் மற்றும் முறையீடுகள் குறுகிய காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று வழிகள் மற்றும் வழிமுறைகள் குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதன் மூலம் ஏற்றுமதியில் இருந்து அன்னியச் செலாவணியைப் பெறுவதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here