“விகாரைகளின் அபிவிருத்தி முக்கியமில்லை என்று ஒரு கருத்தோட்டம் உருவாகியுள்ளது”

167

விகாரைகளின் அபிவிருத்தி முக்கியமில்லை என்று ஒரு கருத்தோட்டம் உருவாகி வருவதாகவும்,விகாரைகளை மையமாக வைத்து நன்கொடையாளர்கள் மற்றும் செல்வந்தர்களின் உதவியுடன் தூபிகளை நீர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை தாம் செயல்படுத்தினாலும்,அதை விமர்சித்து சமூக வலைதளங்கள் மூலம் சேறுபூசும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்,அரசாங்க நிதி இதற்குப் பயன்படுத்தப்படவில்லை என்பதால் சில பௌத்தர்கள் கூட இதை விமர்சித்தார்கள் என்றும்,இந்த கபட பொறாமைத்தனத்தால் சம்புத்த சாசனத்தை ஒரு போதும் பாதுகாக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளைப் பெறுவதற்கும் அரச அதிகாரத்தைப் பெறுவதற்கும் பௌத்தம் பயன்படுத்தப்பட்டது என்றும்,இவ்வாறு செயற்படக் கூடாது என்றும், அரசியலமைப்பில் கூட பௌத்த மதத்திற்கு சிறப்பிடம் உண்டு என்று கூறப்பட்டாலும் அது முறையாக செயற்படுத்தப்படுவதில்லை என்றும்,நாட்டின் தலைவர் உட்பட ஏனையவர்களும் மிக உயர்ந்த நாட்டின் சட்டங்களையும் மீறி மிஹிந்தலை புனித பூமி,திம்புலாகல விகாரை உட்பட பல மத வழிபாட்டுத் தலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சிவப்பு எச்சரிக்கை பத்திரங்கள் கூட அனுப்பப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வாயாடி பௌத்தர்கள் உருவாகிறார்களே என்றாலும் நாட்டுக்கு தேவைப்படுவது நடைமுறை பௌத்தர்களே என்றும், தற்போதைய எதிர்க்கட்சி அரசியல் இலக்குகளை அடைய மதத்தை பயன்படுத்தாது என்றும்,சமூகங்களுக்கும் மதங்களுக்கும் இடையே அமைதியான சூழல் நிலவும்போது, தேசிய பாதுகாப்பு கூட பாதுகாக்கப்படுவதாகவும்,மலட்டுக் கொத்து மலட்டு அறுவை சிகிச்சை பற்றி பேசும் போது அது பொய்ப்பித்துப்போவதாகவும்,கடந்த கால ஆட்சியாளர்கள் தேசிய ஒற்றுமைக்குப் பதிலாக தேசிய ஒற்றுமையீனத்தைப் பரப்பி மத,இனங்களுக்கு இடையே வெறுப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு,இறயாண்மை, பிரிவினைவாதமற்ற தன்மை என்பன வெறும் காகிதங்களுக்குள் மட்டுப்படுத்தப்படாமல் ஒவ்வொரு இலங்கையர்களின் இதயத்திலும் இருக்க வேண்டும் என்றும்,அப்போதுதான் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

காலி மாகாண பிரிவுக்கான பிரதி பிரதம சங்கநாயக்க தேரர் பிரேமரத்ன நாயக்க தேரருக்கு பதவிக்கான நற்சான்றிதழ் பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் இலங்கைப் பிரஜையாக மாத்திரமன்றி உலகளாவிய பிரஜையாக உருவாக்கும் பயணம் சிறுவயதிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

மத வழிபாட்டுத் தலங்களில் நாட்டின் இளைஞர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும்,நாகரீகமான நல்லொழுக்கமுள்ள மக்கள் சமூகத்தை கட்டியெழுப்பும் வகையில், மதங்களை மையமாகக் கொண்ட மத போதனைகளின் செய்தியை வழங்கும் அதேவேளை,புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உயர்கல்வியை வழங்கும் நிலையங்கள் நிறுவப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாடு சீர்பெற வேண்டுமானால் நாமும் சீர்பெற வேண்டும் என்றும்,யார் உண்மையிலேயே மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் திறன் நாட்டு மக்களுக்கு இப்போது உள்ளதாகவும்,இது வர்த்தமானிகள், சுற்றறிக்கைகள்,குழுக்களுக்கு என்று மட்டுப்படாமல் நடைமுறையில் நாட்டுக்கு யார் உழைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here