வழக்கறிஞர் சங்கம் சபாநாயகரிடம் முறைப்பாடு

127

வழக்குகள் மற்றும் நீதிபதிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிடும் அறிக்கைகள் சட்டத்தின் ஆட்சிக்கும் நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சட்டத்தரணிகள் சங்கத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்தார்.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன மற்றும் சங்க உறுப்பினர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்து இந்த அறிவித்தலை வழங்கினர்.

தற்போது கடமையாற்றும் நீதிபதிகளின் பெயர்களை குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கைகளை வெளியிடுவதை காணக்கூடியதாகவும், இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் சபாநாயகரிடம் தெரிவித்துள்ளது.

இங்கு உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நீதிபதிகள் உட்பட நீதித்துறையின் கௌரவத்தை எப்போதும் பாதுகாப்பேன் என தெரிவித்தார். இது தொடர்பில் உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி நளிந்த இந்திரதிஸ்ஸ, செயலாளர் சட்டத்தரணி இசுரு பாலபடபேடி, பொருளாளர் சட்டத்தரணி சமத் ஜயசேகர, உதவிச் செயலாளர் சட்டத்தரணி மெஹ்ரான் கரீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here