follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுகாணாமல் போன மாணவனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை கோரல்

காணாமல் போன மாணவனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை கோரல்

Published on

குருநாகல், கல்கமுவ தம்புத்தேகமவை சேர்ந்த முஹம்மத் அனூஸ் என்ற பதினாறு வயதுச் சிறுவனைக் காணவில்லை என, கடந்த 11ம் திகதி வாரியபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கண்டி, தஸ்கர பிரதேசத்தில் இயங்கி வரும் அரபு கல்லூரியான அல்-ஹக்கானியாவில் இருந்து கடந்த ஒன்பதாம் திகதி மாலை 4.04 மணியளவில் வீடு செல்வதாக வெளியேறியுள்ளதாக கல்லூரி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் குறித்த மாணவன் இதுவரைக்கும் வீடு வந்து சேரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கடைசியாக கெலிஓயா பகுதியில் மாலை 05.15 மணியளவில் சிசிடிவி கமராவில் குறித்த மாணவன் அங்கிருப்பது பதிவாகியுள்ளது.

குறித்த மாணவனை கண்டுபிடிக்க பொலிசார் மற்றும் ஊர் மக்கள் தேடுதலினை ஆரம்பித்துள்ளனர். குறித்த மாணவனை அடையாளம் காண முடிந்தால் தந்தை முஹம்மத் நிஸ்தார் 0774917915 அல்லது 0774956581 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காணாமல் போன மாணவன்

No description available. No description available.

 

 

 

 

 

 

 

 

பொலிஸ் முறைப்பாடு 

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...