இன்றைய ரயில் சேவைகள் குறித்த விசேட அறிவிப்பு

161

இன்று (13) காலை சுமார் 40 அலுவலக ரயில் பயணங்களை நடத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

கொழும்பு கோட்டைக்கு 15 காலை புகையிரத பயணங்களும், புத்தளம் மார்க்கத்தில் இருந்து கொழும்புக்கு காலை 04 புகையிரத பயணங்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

களனிவெளியில் இருந்து கொழும்பு கோட்டை வரை 4 புகையிரத பயணங்களும், கரையோரப் பாதையில் 17 புகையிரத பயணங்களும் நடத்தப்படும்.

அலுவலகத்திற்கு செல்லும் பயணிகளுக்காக தூர மாகாணங்களில் இருந்து கொழும்பு கோட்டைக்கு இரவு நேர அஞ்சல் ரயிலை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here