கோட்டைக்கும் மருதானைக்கும் இராணுவப் பாதுகாப்பு

802

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேவைப்பட்டால் ஏனைய புகையிரத நிலையங்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்த முடியும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உதவியாக இராணுவத்தை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திணைக்கள துணைப் பொது மேலாளர் என்.ஜே. இந்திபோலகே குறிப்பிட்டார்.

புகையிரதத்தை இயக்குவதற்கு ஒன்றிணைந்த புகையிரத சாரதிகள் மற்றும் நிலைய அதிபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பணிப்புறக்கணிப்பினால் ஏற்படக்கூடிய சிக்கல் நிலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here