நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு?

749

கடந்த சில தினங்களாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதான நகரங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் எரிவாயு விற்பனையாளர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, தமக்கு நிறுவனத்திடமிருந்து எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் சில தினங்களாக மேற்கொள்ளப்படவில்லை எனவும், இதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் லிட்ரோ நிறுவன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கருத்துக் கேட்க முற்பட்ட போதிலும், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here