முஜிபுர் தீர்மானம் எடுக்க இது தானாம் காரணம்

1968

ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றியடையச் செய்யப்போய் பின்னர் அரசியல் ரீதியாக தான் தோற்றுப்போனதாக கொழும்பு மேயர் வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மான் அக்கட்சியின் தலைவர்கள் முன்னிலையில் வலியுறுத்தியுள்ளார்.

எனவே தனக்கு தேசியப்பட்டியலில் உறுப்பினர் பதவியை வழங்குவது கடமை என அவர் வலியுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவுக்கு இந்த யோசனை ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் பாராளுமன்றத்தில் இருந்து விலக மறுத்துள்ளார் என்றும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here