நாமலுக்கு எதிரான முறைப்பாடு விசாரணைக்கு

186

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் சிலர் மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை பெப்ரவரி 15ஆம் திகதி மீளப்பெறுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபாவை ஹெலோகார்ப் நிறுவனத்தில் முதலீடு செய்து பண மோசடி செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணை தொடர்பான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட முறைப்பாட்டை பெப்ரவரி 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை தெரிவிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here