follow the truth

follow the truth

September, 19, 2024
Homeவணிகம்Hayleys Fabric, Pro Green Laboratories இணைந்து FaBriEco ஐ அறிமுகப்படுத்துகிறது

Hayleys Fabric, Pro Green Laboratories இணைந்து FaBriEco ஐ அறிமுகப்படுத்துகிறது

Published on

இலங்கையின் முன்னணி ஆடை உற்பத்தியாளர்களில் ஒருவரான Hayleys Fabric PLC, தொழில்துறை கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களாக மாற்ற மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் Pro Green Laboratories உடன் கைகோர்த்துள்ளது.

FaBriEco ஒத்துழைப்பின் நோக்கம், ஆடைத் தொழில்துறையின் துணை தயாரிப்புகளான கழிவாக அகற்றப்படும் சாயங்கள், கழிவாக வீசப்படும் துணிகள் மற்றும் புகையாக பறக்கும் சாம்பல் போன்ற உற்பத்திக் கழிவுகளைப் பயன்படுத்தி உள்ளூர் சந்தைக்கு மலிவு விலையில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தயாரிப்புகளை உருவாக்குவதாகும்.

இந்த முயற்சியானது Pro Green Laboratoriesன் பேராசிரியர் ரங்கிகா யூ ஹல்வத்துரவின் செயற்பாடுகளின் கீழ் நடத்திய ஆய்வின் அடிப்படையில் அமைந்ததுடன் மண் கொன்கிரீட் செங்கற்கள் மற்றும் பாலிமர் சுய-கச்சிதமான மண் செங்கற்கள் போன்ற நிலையான தயாரிப்புகளுக்கான காப்புரிமையை அவர் ஏற்கனவே பெற்றுள்ளார்.

No description available.

“இந்தக் கூட்டாண்மை பசுமையான எதிர்காலத்தை உருவாக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். Pro Green Laboratories உடன் எங்களின் நிலைத்தன்மை குழுவில் இணைவதன் மூலம், கழிவு நிர்வகிப்பு மற்றும் உற்பத்தியில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும், இது ஒரு வட்டப் பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும்.” என Hayleys Fabric இன் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஹான் குணதிலக்க தெரிவித்தார்.

பாரம்பரிய கழிவு நிர்வகிப்பு முறைகளைப் பயன்படுத்தாமல், தீங்கு விளைவிக்கும் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மீள்சுழற்சி செய்து பயனுள்ள ஒன்றாக மாற்றுவதே Hayleys Fabric நிறுவனத்தின் நோக்கமாகும்.

No description available.

பேராசிரியர் ஹல்வத்துர மற்றும் அவரது குழுவினர், ஆடைத் தொழிலில் இருந்து உருவாக்கும் அப்புறப்படுத்தப்பட்ட சாயங்கள், கழிவாக வீசப்படும் துணிகள் மற்றும் சாம்பல் ஆகியவற்றைப் பயன்படுத்தி கொன்கிரீட் செங்கற்களை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இக்கற்கை தொடர்புடைய சோதனைகள் ஆய்வக ஆராய்ச்சியை உருவாக்குகின்றன, அங்கு அவை வெவ்வேறு உள்ளீடுகள் மற்றும் பயன்பாடுகளை ஆராய்கின்றன.

“ஒரு ஆராய்ச்சியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் என்ற முறையில், Hayleys Fabric உடனான எங்கள் கூட்டாண்மை பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கூட்டாண்மை இரண்டு நிறுவனங்களுக்கிடையில் ஒரு வலுவான பிணைப்பாக இருப்பது மிகவும் முக்கியமானது, அவை நிலைத்தன்மை மற்றும் புத்தாக்கத்தின் வளர்ச்சியில் ஆழமாக அர்ப்பணிப்புடன் உள்ளன.

இந்த ஒத்துழைப்பின் மூலம், ஆடைத் துறையில் தற்போதைய தேவைகளின் அடிப்படையில் புரட்சிகரமான தீர்வுகளைக் கண்டறியும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். இதன் மூலம், கழிவுப் பொருட்களை மதிப்புமிக்க வளங்களாக மாற்றும் சுற்றுச்சூழல் நட்பு தொழில்நுட்பங்களை உருவாக்கி, மேலும் நிலையான மற்றும் சுழற்சிமுறை பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.”

“இந்த கூட்டாண்மையின் வலிமை மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நமது பலம் மற்றும் மதிப்புகளை இணைப்பதன் மூலம், ஆடைத் துறையில் நிலையான மாற்றத்தை உருவாக்கி, சூழலுக்கு ஏற்ற புத்தாக்கங்களை உருவாக்க முடியும். அதற்கு நாங்கள் தலைமை தாங்குவதில் பெருமை கொள்கிறோம்” என பேராசிரியர் ஹல்வத்துர தெரிவித்தார்.

அவர்களின் சுற்றுச்சூழல், சமூகப் பொறுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் (ESG) இலக்குகளை அடைய உதவும் Hayleys Fabricஇன் பல நிலைத்தன்மை திட்டங்களில் இந்த முயற்சி சமீபத்திய நடவடிக்கையாகும். இந்த நோக்கங்கள் Hayleys Lifecode மூலம் ஈர்க்கப்பட்டு, சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்புக்கான அவர்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

தரப்படுத்தப்பட்ட ஆடை மதிப்பீட்டிற்கான நன்கு அறியப்பட்ட ஜெர்மன் தளமான ISPO Textrends இல் Hayleys Fabric மதிப்பீடு செய்யப்பட்டது. கரிம, சுற்றுச்சூழல் நட்பு ஜவுளி உற்பத்தி மற்றும் இயற்கை சாய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் Hayleys Fabric மேற்கொண்ட அர்ப்பணிப்பு காரணமாக இந்த சாதனை கிடைத்தது.

உற்பத்திச் செயல்பாட்டில் நிலையான நடைமுறைகளை உறுதி செய்வதில் Hayleys Fabricன் தீவிர ஆர்வத்தையும் இந்த மதிப்பீடு நிரூபிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்கள் வங்கியின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு மேம்பாடு குறித்த தெளிவுபடுத்தல்

மக்கள் வங்கியின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பின் மேம்பாடு தொடர்பில் முறையற்ற பரிவர்த்தனையொன்று இடம்பெற்றுள்ளதாக மறைமுகமாக குற்றஞ்சுமத்தும் வகையில் சமீபத்தில்...

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் $577.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் பொறுப்பேற்றதிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் 12.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த...

உலக அளவில் பேசப்பட்டு வந்த iPhone 16 சந்தைக்கு

ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர வன்பொருள் வெளியீட்டு விழாவில் கடந்த சில நாட்களாக உலக அளவில் பேசப்பட்டு வந்த...