எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து முரளி ஆரூடம்

936

எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘800’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் 2023 ஒக்டோபர் 5-ம் திகதி முதல் நவம்பர் 19-ம் திகதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது.

இம்முறை உலகக் கிண்ணத் தொடரை இந்தியா நடத்துகின்றது. போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்தநிலையில்,உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என முரளிதரன் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கே சாதகமாக இருக்கக்கூடும்.

ஏனெனில் அவர்கள் சிறந்த அணி. மேலும் சொந்த மைதானங்களில் சாதகமான சூழ்நிலை உள்ளது.

அத்துடன் கோடிக்கணக்கான கிரிக்கட் ரசிகர்களின் ஆதரவும் உள்ளது.

இது இந்திய வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் நிலைமையாக உள்ளது. இந்திய அணிக்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தானுக்கு வாய்ப்புகள் உள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here