ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 265 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக, ஷகிப் அல் ஹசன் 80 ஓட்டங்களையும், டவ்ஹித் ஹிரிடோய் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இந்திய அணியின் சர்துல் தாகூர் 65 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 11 மேலதிக ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், 266 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.5 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக சுப்மன் கில் 121 ஓட்டங்களையும், அக்ஷர் படேல் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணியின் தன்சிம் ஹசன் சாகிப் 32 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 17 மேலதிக ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.