follow the truth

follow the truth

June, 6, 2024
HomeTOP1பதினைந்து வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது

பதினைந்து வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது

Published on

பதினைந்து வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 27 வயதுடைய ஆசிரியர் ஒருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில், மாணவனின் தாய் வெலிகம பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த மாணவன், குறித்த சந்தேக நபரால் தனது வீட்டில் நடத்தப்பட்டதாக கூறப்படும் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்துள்ளார்.

இம்மாதம் 6ஆம் திகதி பயிற்சி வகுப்பிற்குச் சென்ற மாணவன் வீடு திரும்பாததால் மாணவனின் தாய், பயிற்சி வகுப்பு நடைபெறும் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

ஆசிரியர் வீட்டில் இல்லை என சந்தேக நபரின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியை மற்றும் அவரது மகன் அங்கு இல்லாததை அறிந்த அவர், பொலிசில் முறைப்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வெலிகம பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சந்தேக நபர் சிறுவனை பாலியல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் கடந்த 12ஆம் திகதி வெலிகம பொலிஸாரின் நோட்டீசுக்கு அமைய சிறுவனும் சந்தேக நபரும் பொலிஸாரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர் தன்னை கொழும்பு மற்றும் கண்டி பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றதாக இங்கு சிறுவன் தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

நாளை மூடப்படும் பாடசாலைகள் குறித்து அறிவித்தல்

தொடர்ந்தும் மோசமான வானிலை நிலவி வருவதனால் நிவித்திகல பிரதேசத்தின் பின்வரும் பிரிவுகளிலுள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (07) விடுமுறை...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 10,000 ரூபாய் நிவாரணம்

மழையுடனான வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக 10,000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கத்தினால்...

பலாங்கொட கஸ்ஸப தேரர் கைது

வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் இன்று (06) தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தேச மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக எதிர்ப்புப்...