தம்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதல் குறித்து உத்திக கருத்து

773

நாட்டில் தற்போதுள்ள நடைமுறையின் கீழ் தான் சுடப்பட்டதாக தாம் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

தனது கார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (19) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

“.. என்னைப் பற்றி தேடி, நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி
இந்தச் சம்பவத்தை யார் செய்தார்கள் என்பதை விட எனக்குத் தோன்றுவது, எனது கணிப்பின்படி, தற்போதுள்ள நடைமுறையின் கீழ் நான் தாக்கப்பட்டதாகவே நினைக்கிறேன். இப்போதுள்ள நடைமுறை இந்த நாடாளுமன்றுக்கே தெரிந்தது தான். நம் நாட்டு மக்களுக்கும் தெரியும். நம் நாட்டின் உள்ள நடைமுறைமை தவறானதென்று.. நம் நாட்டின் சமூக அமைப்பும் தவறானது, நாம் செய்யும் அரசியலும் தவறானது. அந்தத் தவறினால்தான் இன்று நாடு முழுவதும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இருபக்கமும் இந்த தவறு உள்ளது. இருபக்கமும் சரி செய்யப்பட வேண்டும். சரியான இடத்தினை நாம் தேட வேண்டும். எங்கு நாம் மாற வேண்டும் என்பதையும் நாம் சரியாக தேட வேண்டும். அதனைத் தேடி, இருதரப்பும் வேலை செய்ய வேண்டும். நாட்டு மக்களும் வேலை செய்ய வேண்டும், அரசியல்வாதிகளும் வேலை செய்ய வேண்டும். அந்த மாற்றத்தினை இந்நாடு சந்திக்கும் வரை எம்மால் முன்னேற முடியாது. அந்த அரசியல் பரிணாமத்தினை இந்நாடு கோருகிறது. நாமும் எந்நேரமும் சொல்வது தான் அந்த மாற்றத்தினை அந்த சிஸ்டத்தினை செயற்படுத்த வேண்டும். இளம் அரசியல்வாதிகள் என்ற வகையில் எமது திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்ல, அதற்காக பாடுபடுவோம்..”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here