எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் அறிக்கை வெளியிடுவார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
இன்று (19) பாராளுமன்றத்தில் ரோஹினி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன;
“நவம்பர் 21 அல்லது 27 ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சையை நடத்தாது, மூன்றாம் தவணையை முடிக்க முடிந்தால், 30.10.2023 முதல் 22.12.2023 வரை 8 வாரங்கள் எடுத்துக் கொண்டு 01.01.2024 முதல் 19.01.2024 வரை மூன்று வாரங்களில் பாடசாலை காலத்தினை முடிக்க முடியும். 1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உயர்தரப் பரீட்சை ஜனவரி 22ஆம் திகதி ஆரம்பமானால், பெப்ரவரி 17ஆம் திகதி நிறைவு செய்ய முடியும். அவ்வாறெனில், பெப்ரவரி 19 முதல் 2024ம் கல்வியாண்டுக்கான முதல் தவணையினை ஆரம்பிக்கலாம். உயர்தரப்பரீட்சை ஜனவரியில் எழுதவுள்ள மாணவர்களுக்கு மூன்று மாதங்கள் கொடுத்தால் மே மாதம் பெறுபேறுகளை வழங்கலாம். அப்படியானால், அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் பரீட்சையினை நடத்தலாம். அப்படியானால், பரீட்சை அட்டவணையை 2025 முதல் புதுப்பிக்கலாம்.”
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,
“திருமதி ரோஹினி கவிரத்ன ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார். ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகளுக்கான முன்மொழிவு பரீட்சை ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் அதுகுறித்து அறிக்கை வெளியிடுவார்” என்றார்.