follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1நேபாள் பிரதமருடன் ஜனாதிபதி என்ன பேசியிருப்பார்

நேபாள் பிரதமருடன் ஜனாதிபதி என்ன பேசியிருப்பார்

Published on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தொடருக்கு இணையாக இன்று (20) நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இதன்போது இரு நாட்டுத் தலைவர்களும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள இலங்கை – நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வு, அதற்கான மிக முக்கியமான நடவடிக்கையாக அமையும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் எதிர்காலத்தில் வலுவாக முன்னேறும் என நம்பிக்கை தெரிவித்த நேபாள பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கருத்துத் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் நேபாள மக்களுக்கு இடையில் சமய மற்றும் கலாசார ரீதியில் பல்வேறு ஒற்றுமைகள் காணப்படுவதாகவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை விரிவுபடுத்துவதற்கு இது ஒரு சிறந்த காரணியாக அமையும் என்பதை இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

மேலும், இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம், தனிமனிதர்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது மற்றும் சுற்றுலாத் துறையில் உறவுகளை மேம்படுத்து குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், பலதரப்பு விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடினர்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் உட்பட இலங்கை மற்றும் நேபாளத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...