இப்ராஹிம் தொடர்பில் வாய்திறந்த அநுர

1457

இப்ராஹிமுக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான அரசியல் ஒப்பந்தம் ஈஸ்டர் பயங்கரவாதச் செயலுக்கு பங்களித்ததாக ஈஸ்டர் விசாரணை அறிக்கை எதுவும் கூறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜே.வி.பிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியான காட்சிகளே தவிர உண்மைக் காட்சிகள் அல்ல என்றும் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்றத்தில் இப்ராஹிமுக்கு எதிராக ஒதுக்கப்பட்ட வழக்கில் அலி சப்ரி வழக்கறிஞராகச் செயல்பட்டதாகவும், இந்த பயங்கரவாதச் செயலில் அலி சப்ரி ஈடுபட்டதாக அதன் மூலம் தீர்மானத்திற்கு வரக்கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தியிருந்தார்.

இப்ராஹிம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் ஒன்றரை அல்லது இரண்டு வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவரது அரசியல் பிரச்சாரம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுடன் தொடர்புடையது என்பது வெளிவரவில்லை என்றும் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here