“கருத்துச் சுதந்திரத்தைப் பலியிடக் கூடாது”

214

ஸ்திரத்தன்மையை அடைவதற்கான பயணத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பலியிடக் கூடாது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அமைதியான போராட்டங்கள் மூலமாகவோ, கலை வெளிப்பாடுகள் மூலமாகவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ கருத்துக்களை வெளிப்படுத்த முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு மஹரகம இளைஞர் சேவை மன்ற மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வு நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதுடன், புத்தாக்கத்தின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் அனைவருக்கும் வலுவான நம்பிக்கை இருப்பதாக ஜூலி சங் சுட்டிக்காட்டினார்.

இது நேற்று (22) காலை மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கலந்து கொண்டிருந்தார்.

சமாதானம் என்பது உலகிற்கு முக்கியமான பிரச்சினை எனவும் கிராம மட்டத்தில் இருந்து சமாதானமும் நல்லிணக்கமும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இதன் காரணமாக அனைத்து கிராமிய சேவைக் களங்களையும் உள்ளடக்கும் வகையில் 14022 சன்ஹிதிய குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here