follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1இந்நாட்டின் போசாக்கு குறைபாடு குறித்து சுகாதார அமைச்சரின் அறிக்கை பொய்யானது

இந்நாட்டின் போசாக்கு குறைபாடு குறித்து சுகாதார அமைச்சரின் அறிக்கை பொய்யானது

Published on

நாட்டில் நிலவும் போசாக்கின்மை நிலை குறித்து சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பொய்யானதும் பொறுப்பற்றதுமான அறிக்கை என குடும்ப சுகாதார பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய போஷாக்கு அறிக்கை நிரூபித்துள்ளது என மருத்துவத்திற்கான மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடுமையான போசாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இல்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த கடந்த ஓராண்டுக்கு முன்னர் தெரிவித்திருந்த கருத்தும் இந்த அறிக்கையின் மூலம் பொய்யாக்கப்பட்ட போதிலும், அந்த கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ கூறுகிறார்.

சுகாதாரப் பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய போஷாக்கு அறிக்கையின்படி, நாட்டில் நிலவும் உண்மையான போசாக்கின்மை நிலைமை மற்றும் அன்று வெளியிடப்பட்ட அறிக்கை மற்றும் இன்று அது குறித்து சுகாதார அமைச்சின் கருத்து என்னவென்பதை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

சமீபத்திய போஷாக்கு அறிக்கையின்படி, இலங்கையில் ஏறக்குறைய ஒரு சதவீத குழந்தைகள், அதாவது 15,000க்கும் அதிகமானோர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், ஏறக்குறைய ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் குழந்தைகள் கடுமையான ஊட்டச் சத்து குறைபாட்டின் அபாய வலயத்தில் அல்லது மிதமான நிலையில் உள்ளதால், 05 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதுடன், அந்த குழந்தைகளின் இறப்பு விகிதமும் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...