இலங்கை அணியை விமர்சிக்கும் பாகிஸ்தான் ரமீஸ் ராஜா

384

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று பகல் இரவு போட்டியாக இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று முன்னிலையில் இருக்கிறது.

இதேவேளை, இந்த தொடர் குறித்து பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கட் வீரர் ரமீஸ் ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

பல்கலைக்கழக அணிக்கும் பாடசாலை அணிக்கும் இடையிலான போட்டியைப் போன்று இந்த போட்டித் தொடர் அமைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக அணியைப் போல இந்திய அணி பலமாக இருப்பதாகவும், பாடசாலை அணியைப் போல இலங்கை அணி பலவீனமாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here